நாட்டில் சடுதியாக அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
இலங்கைக்கு ஜனவரி மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 201,687 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
50,000 ஆவது சுற்றுலாப்பயணி
இதேவேளை, கடந்த 16 மாதங்களில் 50,000 சுற்றுலாப் பயணிகள் தாமரை கோபுரத்தை பார்வையிட வந்துள்ளதாக தாமரை கோபுர நிர்வாகப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் , 50,000 ஆவது சுற்றுலாப்பயணியாக வருகை தந்த பல்கேரிய பெண் ஒருவருக்கு நேற்று (31.1.2024) சிறப்பு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |