அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பம்!
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயல்பாட்டை ஒரு அரசு சாரா நிறுவனம் மேற்கொண்டால் அதை இடைநிறுத்தம் செய்ய சட்டத்தில் எந்த ஏற்பாடுகளும் இல்லை என அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (பதிவு மற்றும் கண்காணிப்பு) சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக விதிக்கப்படும் 250 ரூபா அபராதத்தை திருத்துவதற்கான முன்மொழிவை அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் பெற்றுள்ளது.
எனவே,குறித்த சட்ட விதிகள் அவசியமான அளவு இல்லாததால், சில அரசு சாரா நிறுவனங்கள் தன்னிச்சையாகச் செயல்படுவதாக அந்த செயலகம் தெரிவித்துள்ளது.
அரசு சாரா நிறுவனங்கள்
தற்போது இருக்கும் சட்டத்தின்படி, அந்த அலுவலகத்தின் இயக்குநருக்கு ஒரு அமைப்பைப் பதிவு செய்ய மட்டுமே அதிகாரம் உள்ளது. அதற்கு மேலான எந்த சட்டவிதிகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
மேலும், அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் மட்டுமல்ல, நிறுவனங்களை பதிவு செய்யும் சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்படுவதால் இது சில நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அரசு சாரா நிறுவனங்களை முறையாக ஒழுங்குபடுத்துவதற்கு, அவற்றை செயலகத்தில் மட்டுமே பதிவு செய்வதற்கு தேவையான திருத்தங்களைச் சட்டத்தில் சேர்க்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 21 மணி நேரம் முன்

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
