எந்தவொரு தரப்புடனும் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை: ரஞ்சித் மத்தும பண்டார
இனவாதமற்ற கூட்டணியாகவே ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி மலருவதோடு, எந்தவொரு தரப்புடனும் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இரகசிய உடன்படிக்கை
மேலும், "தூய்மையான அரசியல்வாதிகளே எம்முடன் இணைந்து வருகின்றனர். எதிர்காலத்திலும் மேலும் சிலர் இணையவுள்ளனர்.
பலமான, பரந்துபட்ட கூட்டணியை விரைவில் அமைத்துத் தேர்தலை எதிர்கொள்வோம்.
வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகின்றோம். எந்தவொரு தரப்புடனும் இரகசிய உடன்படிக்கை இல்லை.
அவ்வாறான இரகசிய உடன்படிக்கை தொடர்பில் எவரும் கோரிக்கை விடுக்கவும் இல்லை. எமது கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸதான்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சமையலறையில் மின்விசிறி நிறுவிய விவகாரம்... கடவுச்சீட்டை முடக்கி பெருந்தொகை அபராதம் விதிப்பு News Lankasri
