கனடாவில் பயணித்த விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன்
கனடாவின் ரொரன்ரோவில் இருந்து கல்கரி நோக்கிச் சென்ற விமானம், மீண்டும் பயணித்த இடத்திற்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளது.
எயார் கனடா விமானத்தில் 16 வயது பயணி ஒருவர் விமான பயணத்தின் போது தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை தாக்கியதில் இந்த எதிர்பாராத தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த எதிர்பாராத சூழ்நிலை காரணமாக பயணிகள் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
எயார் கனடா
எயார் கனடா விமானம் 137 ரொரன்ரோவில் இருந்து கல்கரி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் பயணித்த 16 வயதுடைய சிறுவன் திடீரென கோபமடைந்து தனது குடும்ப உறுப்பினரை தாக்கியதில் விமானத்திற்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக விமானத்தை பயணித்த இடத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனை
விமானம் வின்னிபெக்கில் தரையிறங்கியதும் தாக்கப்பட்ட பயணி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் தாக்குதல் நடத்தி பயணிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |