யாழில் ஒன்று கூடும் போதைப்பொருள் அடிமையாளர்கள்! அச்சுறுத்தலாக மாறும் வீதிகள்
யாழ்ப்பாணத்தில் ஆட்கள் அற்ற வீடுகளில்
போதைக்கு அடிமையானவர்கள் ஒன்று கூடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண நகர்ப் பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலுள்ள ஆட்கள் அற்று, பாழடைந்த வீடுகளில் மாலை வேளைகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையான கும்பல்கள், அந்த வீடுகளில் கும்பல் கும்பலாகப் போதைப் பொருட்களை நுகர்ந்து கொள்கின்றனர்.
அவர்கள் வீடுகளுக்குள் இருந்து பெரும் குரலுடன் சத்தங்களை எழுப்புவதனால், அந்த வீட்டுப் பகுதியில் அமைந்துள்ள வீதிகளில் பயணிப்போர் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர்.
உயிரிழப்புக்கள் ஏற்படும் சம்பவங்கள்
யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில், ஊசி மூலம் போதைப்பொருளை உட்செலுத்தி கொள்பவர்களும் அதிகரித்துள்ளனர்.
இவ்வாறு அதிகளவில் போதைப்பொருட்களை உட்செலுத்திக்கொள்வதாலும், தொடர்ந்து போதையை நுகர்வதாலும் கிருமித் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்புக்கள் ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சந்தேகத்திற்குரிய இடங்களில் பொலிஸார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துரித தொலைபேசி இலக்கம்
தற்போது நாட்டில் பல்வேறு போதைப்பொருள் குற்றங்கள் அதிகரித்து வருவதுடன், குற்றச் செயல்களும் அதிகரித்தே காணப்படுகின்றது. இதனை அறிவிப்பதற்கு, துரித தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில், 1984 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும் என இலங்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |