நாட்டில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகவில்லை: வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் அறிவிப்பு
நாட்டில் காட்டுத் தீ விபத்துகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படும் செய்திகள் பொய்யானவை என்று வனப் பாதுகாப்புத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
எனினும், அனைத்து காட்டுத் தீ சம்பவங்களும் மனிதனால் உருவாக்கப்பட்டவையாகும் என வனப்பகுதிகளுக்கு அருகில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வனப் பாதுகாவலர் நாயகம் என். எதிரிசிங்க வலியுறுத்தியுள்ளார்.
தீ விபத்து
வறண்ட காலங்களில் புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டிய காடுகளில் தீப்பிடிக்கும் போக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2024ஆம் ஆண்டில், மொத்தம் 437.9 ஹெக்டேர் நிலங்கள் தீயினால் எரிந்தன.
தீ விபத்துகளால் அடிக்கடி பாதிக்கப்படும் மாவட்டங்களில் பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, மொனராகலை மற்றும் கேகாலை ஆகியவை அடங்குகின்றன.
திணைக்களத்தின் அறிவிப்பு
இந்தநிலையில், 2025ஆம் ஆண்டில் இதுவரை, கண்டி மாவட்டத்தில் நான்கு தீ விபத்துகள், மாத்தளை மாவட்டத்தில் ஒன்று, நுவரெலியா மாவட்டத்தில் ஒன்று, இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டு மற்றும் பதுளை மாவட்டத்தில் ஒன்று என தீவிபத்துக்கள் பதிவாகியுள்ளன.

அண்மையில் கண்டி மாவட்டத்தின் கலஹா பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சுமார் 20 ஏக்கர் பரப்பளவான நிலம் பாதிக்கப்பட்டது என்றும் வனப் பாதுகாவலர் நாயகம் என். எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri
அருகில் வந்த போலீஸ்.. நடுங்கும் குணசேகரன், தம்பிகள்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam