சுரேஷ் சலே விவகாரத்தில் விசேட வரப்பிரசாதங்கள் வழங்க முடியாது..! பிரதியமைச்சர் அறிவிப்பு
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளரான சுரேஷ் சலே கைது மற்றும் தடுப்புக்காவல் பராமரிப்பில் எந்தவொரு விதிமீறலும் நடைபெறவில்லை என்று பிரதியமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போது பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வடகல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் விதிகளுக்கு அமைய சட்டப்பூர்வ கைது
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால். 'அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் விதிகளுக்கு அமைவாகவே சட்டப்பூர்வமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் எவ்விதத் தவறும் இல்லை''இந்த விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடுகள் எதுவும் இல்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டே சலே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது முற்றிலும் சட்டப்பூர்வமானது என்பதுடன், நடைமுறையிலுள்ள ஒரு சட்டத்தின் விதிகளை நடைமுறைபடுத்துவது மட்டுமேயாகும்' 'அத்துடன் அவர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவையாகும்.
தடுப்புக் காவலில் உள்ள ஏனைய கைதிகள் போன்றே அவரும் நடத்தப்பட்டுள்ளார். அவருக்காக விசேட வரப்பிரசாதங்கள் வழங்க முடியாது' என்றும் பிரதியமைச்சர் சுனில் வடகல தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
21 நாட்களுக்கு முன்னர் கிடைத்த இரகசிய தகவல்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச எச்சரிக்கை..
YOU MAY LIKE THIS VIDEO