முன்னாள் நிதியமைச்சரின் உடலுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி இல்லை
உயிரிழந்த முன்னாள் நிதியமைச்சரும், பிரபல பொருளாதார நிபுணருமான ரொனி டி மெல்லின் இறுதி விருப்பத்துக்கு மதிப்பளித்து, பொது மரியாதைக்காக அவரது உடலை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் கோரிக்கையை ஏற்பாட்டுக் குழு நிராகரித்துள்ளது.
ரொனி டி மெல்லின் இறுதிக் கிரியைகள் மார்ச் மாதம் 01ஆம் திகதி பிற்பகல் மாத்தறையில் நடைபெறவுள்ளது.
இதற்கமைய, பூதவுடல் தகன ஊர்வலம் மாத்தறை வெல்லமடம் ருஹுனு பல்கலைக்கழகத்திற்கு இன்று (29.02.2024) பிற்பகல் 2.00 மணியளவில் தெற்கு அதிவேக வீதியூடாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இறுதி அஞ்சலி
ருஹுனு பல்கலைக்கழக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன பிரதி உபவேந்தர் பேராசிரியர் சமன் சந்தன பெரம்வீர மற்றும் ஏனைய பல்கலைக்கழக ஊழியர்கள் உடலை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
பின்னர், உடல் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் அஞ்சலிக்காக ருஹுனு பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கிற்கு அருகில் உள்ள விசேட மண்டபத்தில் வைக்கப்படும். அதேவேளை எதிர்வரும் மார்ச் ஆம் திகதி, இறுதி ஊர்வலமாக ருஹுனு பல்கலைக்கழக மைதானத்திற்கு சடலம் எடுத்துச் செல்லப்படும்.
அதனைத் தொடர்ந்து, மாலை 4.00 மணியளவில் பௌத்த சமய சடங்குகளின பின் அமைச்சரின் இறுதி விருப்பத்தின்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரது அரசியல் வழிகாட்டியான முன்னாள் அமைச்சர் பிலிப் குணவர்தனவின் புதல்வர் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இரங்கல் உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |