இலங்கைக்கான பயணத்தடை குறித்து ஜூலி சங் வெளியிட்ட தகவல்
இலங்கைக்கு பயணத்தடை விதிக்கப்படவில்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று (28.10.2024) நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அறுகம் குடா பகுதிக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் மட்டுமே வழங்கியதாக ஜூலி சங் சுட்டிக்காட்டியுள்ளார்.
விளக்கமளிக்கும் கடப்பாடு
அறுகம் குடா பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக நாம் இலங்கை அதிகாரிகளுடன் கூறியதையடுத்து, அவர்கள் அதற்கு விரைவாக பதிலளித்தனர்.
இதனையடுத்து, நாம் குறித்த அச்சுறுத்தல் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் பலமுறை கலந்துரையாடினோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கைக்கான பயண ஆலோசனைகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படும் போது, அதற்கு விளக்கமளிக்கும் கடப்பாடு தமக்கு இருப்பதாகவும் ஜூலி சங் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
