அமெரிக்க வரி குறைப்பு இலங்கைக்கு சிறப்பு நன்மைகளை தராது
அமெரிக்காவின் வரி குறைப்பு இலங்கைக்கு சிறப்பு நன்மைகளைத் தராது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் பரஸ்பர வரி விகிதத்தை 20% ஆக மேலும் குறைத்திருந்தாலும், இது இலங்கைக்கு சிறப்பு வாய்ப்பை வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை கூறியுள்ளார். "வரி 20% ஆக குறைக்கப்பட்டுள்ளது.ஆனால் இது இலங்கைக்கு மட்டுமல்ல. ஆடைத் துறையிலும் மற்ற துறைகளிலும் அமெரிக்க சந்தையில் எங்களுடன் போட்டியிடும் மற்ற நாடுகளுக்கும் இதேபோல் வரி குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த வரி குறைப்பால் எங்கள் நாட்டுக்கு சிறப்பு நன்மை இல்லை. ஏனெனில், பங்களாதேஷை எடுத்துக்கொண்டால் 20%, வியட்நாமை எடுத்துக்கொண்டால் 29% ஆக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், இந்தியாவுக்கு 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை கையெழுத்திடுவதற்கு இந்தியாவுக்கு ஒரு செய்தியை அனுப்புவதற்காக இலங்கையை பயன்படுத்தியிருக்கலாம் என அவர் சுட்டிககாட்டியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் திருவிழா




