கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தமைக்கு காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை - ரவி குமுதேஷ்
பீ.சி.ஆர் சோதனைகளின் குறைப்பு மற்றும் கோவிட் கண்காணிப்புகளில் குறைப்பு என்பன சமூகத்தில் கோவிட் தொற்று மேலும் பரவுவதை ஏற்படுத்தக்கூடும்.அத்துடன் அது தற்போதைய நிலைமை விரைவாக மோசமடையக்கூடும் என்று இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி திட்டம் அமுல் செய்யப்படுவதை அடுத்து நாள் ஒன்றுக்கு பீ.சி.ஆர் சோதனை 7,000 ஆக குறைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பீ.சி.ஆர் சோதனைகளை குறைப்பது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது.அத்துடன் கோவிட் மாதிரிகள் சேகரிப்பதும் குறைந்துவிட்டது.
சமூகத்தில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வாறு குறைக்கப்பட்டது என்பதை நம்புவதற்கு இதுவரை வெளிப்படையான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தற்போது நடைபெற்று வரும் தடுப்பூசி திட்டத்தின் மூலம், நாட்டில் வைரஸைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் செல்லும்.
சமுதாயத்தில் நோய் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்கு, குறைந்தது 60 வீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
எனினும் இலங்கைக்கு 1.3 மில்லியன் தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்துள்ளன. நாட்டில் உள்ள மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது, நிலைமையைக் கொண்டுவர குறைந்தபட்சம் 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மக்கள் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட வேண்டும் என்று அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கோரியுள்ளார்.