ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு இல்லை
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மாநாயக்க தேரர்கள் அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரியிருந்தனர்.
எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.
கடூழிய சிறைத்தண்டனை
எனினும், வெசாக் பௌர்ணமி தினத்தில் விடுதலை செய்யப்பட உள்ள கைதிகளின் பட்டியலில் ஞானசார தேரரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்லாமிய மதத்திற்கு இழிவு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் தற்பொழுது அந்த தண்டனையை அவர் அனுபவித்து வருகின்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |