எல்.பி.எல் அணியொன்றின் உரிமை ரத்து
லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் பங்கேற்கும் அணியொன்றின் உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னணி அணிகள் ஒன்றான தம்புள்ள தன்டர்ஸ் அணியின் உரிமை இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக லங்கா பிரிமியர் லீக் நிர்வாகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் வெளிப்படைத்தன்மை மற்றும் தரத்தை பேணிப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போட்டித் தொடரின் தலைவர் அனில் மோஹான் தெரிவித்துள்ளார்.
இம்பிரியல் ஸ்போர்ட்ஸ் குரூப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தமீம் ரஹ்மான் எதிர்நோக்கியுள்ள சட்டச் சிக்கலை கருத்திற் கொண்டு இந்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
தம்புள்ள தன்டர்ஸ் அணியின் உரிமை வேறும் ஒரு தரப்பிற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உரிமையாளர்களின் கீழ் தம்புள்ள தன்டர்ஸ் அணி போட்டித் தொடரில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2024ம் ஆண்டு லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுவதற்கு யோசனை முன்வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தம்புள்ள தன்டர்ஸ் அணியின் உரிமையாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான தமீம் ரஹ்மான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை எதிர்வரும் 31ம் திகதி வரையில் தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |