ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி கிடையாது: ரொஹான் குணரட்ன
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி எதுவும் கிடையாது எனச் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இந்த தாக்குதல் ஏன் நடத்தப்படுகின்றது என்பது குறித்து சஹ்ரான் காணொளியில் விளக்கியுள்ளார். அல்லாஹ்வின் விருப்பத்தின் பேரில் ஜிஹாதிய புனிதப் போர் நடத்தப்படுகின்றது.
நியூசிலாந்தில் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நோக்கில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. அல்லாஹ்வின் வீட்டிற்குள் தலையீடு செய்ய அனுமதிக்கப்படாது.
சஹ்ரானுடன் பேசிய அபுஹித் என்பவர் இந்திய பொலிஸ் உத்தியோகஸ்தராவார், அவரே ஈஸ்டர் தாக்குதல் பற்றி இலங்கைக்குத் தகவல் வழங்கியவர். தாக்குதல் நடத்தப்படுவதற்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டது.
இந்த தாக்குதலின் பின்னணியில் அடிப்படைவாத, மதவாத மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளே காணப்படுகின்றன, அரசியல் சூழ்ச்சித் திட்டமில்லை என பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
