நாட்டில் எதிர்க்கட்சி கிடையாது – லால்காந்த
நாட்டில் தற்பொழுது எதிர்க்கட்சியொன்று ஒன்று கிடையாது என விவசாய அமைச்சர் கே டி லால் காந்த தெரிவித்துள்ளார். நாட்டில் பழைய அரசியல் மீண்டும் உருவாவதற்கு வாய்ப்புகள் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களுக்கு இது பெரும் அதிர்ஷ்டம் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எதிர்க்கட்சியினர் மீண்டும் பழைய அரசியலை உருவாக்க முயற்சிக்கின்றார்கள் எனவும் எனினும் அது நடைபெறாது எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எதிர்க்கட்சிகள் இல்லாத காரணத்தினால் சில ஊடக நிறுவனங்கள் தங்களை எதிர்க்கட்சிகளாக மாற்றிக் கொள்ள முனைகின்றன என தெரிவித்துள்ளார்.
அவ்வாறான சூழ்நிலையில் வங்குரோத்து அடைந்த அரசியல் கட்சிகளின் குணாதிசயங்கள் ஊடகங்களில் ஊடாக வெளிப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் வங்குரோத்து நிலையை வெளிப்படுத்த முனைந்து ஊடகங்கள் வங்குரோத்து அடைந்து விடும் என்பதனை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
பழைய அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை சில ஊடக நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பழைய அரசியல் கலாச்சாரத்தின் கோரமுகம் அந்த துர்நாற்றம் சில ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களினால் தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஊடகங்களின் ஊடாக மீண்டும் தலை தூக்க முயற்சிக்கின்றன ஆனால் அது அவ்வாறு நடக்காது எனவும் பொய்களை ஜோடனை செய்து வெளிப்படுத்த முடியுமே தவிர அரசியல் ரீதியாக வெற்றியடைய முடியாது என அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri