அநுரவின் பின்னால் இளைஞர்கள் சென்றால் அவர்களை விட முட்டாள்கள் யாருமில்லை : கஜேந்திரகுமார் பகிரங்கம்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலே ஜே.வி.பி இற்கு பின்னால் இளைஞர்கள் சென்றால் அவர்களை விட முட்டாள்கள் யாருமில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கிலுள்ள சில இளைஞர்கள் ஜே.வி.பியை ஆதரிப்பதாக கூறுகின்றனர். ஆனால் எமக்கு அவ்வாறு ஆதரிப்பதாக எதுவும் தெரியவில்லை.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தப் போர் இடம்பெறுவதற்கு முழுமையான ஆதரவை ஜே.வி.பியே வழங்கியது.
இந்நிலையில், தற்போது ஒற்றையாட்சிக்குள் இருக்கக்கூடிய 13ஆம் திருத்தத்தை விட மோசமான தமிழர்களை ஏமாற்றுவதற்காக ஒருமித்த நாடு என்ற சட்டத்திற்கு அறியாத சொற்பதத்தை பயன்படுத்துகிறார்கள்.
இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் ஜே.வி.பி இற்கு பின்னால் இளைஞர்கள் செல்வார்கள் என்றால் அவர்களை விட முட்டாள்கள் யாருமில்லை எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
