சந்திரிகா பண்டாரநாயக்கவை எவரும் தூக்கி வீச முடியாது: ரோஹன லக்ஸ்மன் பியதாஸ
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஆற்றலும் அனுபவமும் கொண்ட சிறந்த மூத்த அரசியல்வாதி. அவரை எவரும் தூக்கி வீச முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம்
சந்திரிகாவின் கட்சி உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழு நேற்று (03.11.2022) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

சந்திரிகாவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சம்பிரதாயத்துக்கு அமையவே நடவடிக்கை எடுத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தனகல்ல பகுதியில் அமைந்துள்ள ஹொரகொல்ல, பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால
சிறிசேன மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரின்
அச்சிடப்பட்ட பதாகையைத் தரையில் வீசி தேங்காய்களையும் உடைத்து கட்சி
உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் 8 மணி நேரம் முன்
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் தடுத்து நிறுத்துங்கள் - தமிழக முதல்வருக்கு யாழ்.கடற்றொழிலாளர் அமைப்பு கோரிக்கை!
கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்