எம்மை யாராலும் அசைக்க முடியாது! பசில் விடுத்துள்ள எச்சரிக்கை
சமகால அரசாங்கத்தை ஆர்ப்பாட்டங்கள் மூலம் கவிழ்க்கவே முடியாது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரயோசனமற்ற இந்த ஆர்ப்பாட்டங்களைக் கைவிட்டுவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் எதிரணியினரிடம் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
"நான் நாடாளுமன்ற உறுப்பினராக - அமைச்சராகப் பதவியேற்றவுடன் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை எதிரணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பிட்ட ஒரு சிலரைக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசைக் கவிழ்க்கவே முடியாது.
நாட்டு மக்கள் மனதில் 'தாமரை மொட்டு' சின்னமே இருக்கின்றது. இந்த 'மொட்டு'க்கு வாக்களித்துத்தான் நாட்டின் பலமிக்க ஜனாதிபதியையும், மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடனான அரசையும் மக்கள் தெரிவு செய்தார்கள்.
எதிரணியினரின் இந்த ஆர்ப்பாட்டங்கள், நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் வழங்கிய அமோக ஆணைக்கு இணையாக வர முடியாது.
எனவே, பிரயோசனமற்ற இந்த ஆர்ப்பாட்டங்களைக் கைவிட்டுவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிரணியினரிடம் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 5 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan