நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோயாளர் எண்ணிக்கை
நாட்டில் தற்போது புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மகரகம தேசிய புற்றுநோய் நிறுவகத்தின் பணிப்பாளர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மகரகம தேசிய புற்றுநோய்நிறுவகத்தில் தினமும் சுமார் 36 புதிய புற்றுநோயாளிகள் பதிவாகி வருவதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
தவறான பழக்கவழக்கங்கள்
தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், சுற்றாடல் பாதிப்புகள், புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பல காரணிகள் புற்றுநோயை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மகரகம தேசிய புற்றுநோய் நிறுவகத்தில் மட்டும் பதிவாகும் புதிய புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மாதாந்தம் 1,000 ஐத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது தேசிய புற்றுநோய் நிறுவகத்தில் சுமார் 1,000 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், நாளாந்த அடிப்படையில் சுமார் 2,000 நோயாளிகள் கிளினிக்குகளில் சிகிச்சை பெறுவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |