பொலிஸாரின் கைதுகளில் அரசாங்கத்தின் செல்வாக்கு: அமைச்சகத்தின் விளக்கம்
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அல்லது அவரது பணியாளர்கள் எவரும், பொலிஸாரின் கைதுகள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகளில் தேவையற்ற செல்வாக்கை செலுத்தவோ அல்லது தலையிடவோ மாட்டார்கள் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.
போதைப்பொருட்களை எதிர்த்துப் போராடுவதற்கும், பாதாள உலகத்தை ஒழிப்பதற்கும், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆள்மாறாட்டம்
இந்தநிலையில், ஹெரோயின் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரை விடுவிக்கும் முயற்சியில் அமைச்சரின் செயலாளராக ஆள்மாறாட்டம் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை 2025 ஜூலை 8ஆம் திகதியன்று கைது செய்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




