வாகன இறக்குமதியின் போது வரிகளைக் குறைக்கும் நோக்கம் இல்லை: அரசாங்கம் அறிவிப்பு
வாகன இறக்குமதியின் போது வரிகளைக் குறைக்கவோ அல்லது விலைகளைக் குறைக்கவோ அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) தெரிவித்துள்ளார்.
இன்று (21) ஊடகங்களுக்கு மத்தியில் உரையாற்றிய அமைச்சர், தாம், அண்மையில் வெளியிட்ட அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பெப்ரவரியில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தேவை எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தால், இலங்கை அரசாங்கம் வாகனங்களுக்கான வரிகளைக் குறைக்கக்கூடும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
வாகன இறக்குமதி
எனினும், வாகனங்களின் தேவை மற்றும் கொள்முதல் காரணமாக உள்ளூர் சந்தை விலையில் மாற்றங்கள் இருக்கலாம் என்று மட்டுமே அப்போது குறிப்பிட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் சாதாரண சந்தை நிலைமைகளின் கீழ் தளர்த்தப்படவில்லை, ஆனால் வரம்புகளின் கீழ், குறிப்பாக அந்நியச் செலாவணியின் கீழ் தளர்த்தப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இறக்குமதியாளர்களுக்கு இறக்குமதி செய்ய சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், மறுபுறம், இந்த நோக்கத்திற்காக அந்நியச் செலாவணி பயன்படுத்தப்படுவதை மத்திய வங்கி கண்காணிக்கும்" என்று அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |