மருத்துவமனைகளில் இன்சுலின் போதுமான அளவில் இல்லை என முறைப்பாடு
இலங்கையின் பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான இன்சுலின் போதுமான அளவு இல்லாததால், அவர்கள், கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று முறையிடப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணி தலைவர் சமல் சஞ்சீவ இந்த முறைப்பாட்டை சுமத்தியுள்ளார்.
மாத்தறையில் உள்ள மருத்துவமனைகள் உட்பட சில மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசிகளை வழங்குவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இன்சுலின் தட்டுப்பாடு
மருத்துவ விநியோக பிரிவுகள், இன்சுலின் விநியோகிக்கப்பட்டதாகக் கூறினாலும், மருத்துவமனைகளில், தேவையான அளவை விட குறைவாகவே அவை கையிருப்பில் உள்ளன.
இதன் விளைவாக, நோயாளிகள் அதிக விலைக்கு வெளிப்புற மருந்தகங்களிலிருந்து ஊசிகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |