“ஒமிக்ரோன்” மாறுபாடு குறித்து உலக சுகாதார அமைப்பின் பிந்திய அறிவிப்பு வெளியானது
“ஒமிக்ரோன்” வைரஸ் மாறுபாடு மனிதரில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
“ஒமிக்ரோன்” என்ற புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடு உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த மாறுபாடு ஏனைய நாடுகளிலும் வேகத்துடன் பரவி வருகிறது. இதனையடுத்து பல நாடுகளும் முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே உலக சுகாதார அமைப்பு, “ஒமிக்ரோன்” கடுமையான நோயை ஏற்படுத்தாது என்று அறிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசர கால இயக்குனர் மைக்கேல் ரியான் (Michael Ryan)கருத்துரைத்துள்ளார்
ஏனைய கொரோனா வகைகளை விட “ஒமிக்ரோன்” கடுமையான நோயை ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளன. அவை தற்போதுள்ள அனைத்து வகைகளுக்கும் எதிராக செயல்பட்டு நோயின் தீவிரத்தை கட்டுபடுத்தியுள்ளன.
எனினும் “ஒமிக்ரோன்” குறித்து மேலும் ஆரய்ச்சி தேவை என்று உலக சுகாதார அமைப்பின் அவசர கால இயக்குனர் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
