மின்சார கட்டணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
அடுத்த காலாண்டில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இன்று (11) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிக மழைவீழ்ச்சி
கடந்த காலத்தில் அதிக மழைவீழ்ச்சி கிடைத்தமையால் மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளமையினால், அடுத்த காலாண்டிற்கு மின்சார கட்டண அதிகரிப்பு தேவையில்லை என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
அதற்கமைய மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் ஆண்டின் முதல் 3 மாதங்களுக்குத் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26