புதிய கொவிட் வைரஸ் வகையை கண்டறியக்கூடிய வசதி இலங்கை விமான நிலையத்தில் கிடையாது
புதிய கொவிட் வைரஸ் வகையைக் கண்டறியக்கூடிய வசதி இலங்கை விமான நிலையத்தில் கிடையாது எனச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19 வைரசின் ஓர் புதிய வகை பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் ஆபத்தானது எனவும், மிகவும் வீரியத்துடன் பரவக்கூடியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த புதிய வகை வைரஸ் தொற்றுடைய தொற்றாளிகளை கண்டறியக்கூடிய நவீன தொழில்நுட்ப வசதிகள் இலங்கை விமான நிலையத்தில் கிடையாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை நுண்ணுயிரிகள் குறித்த கல்லூரியின் தலைவர் டொக்டர் ஷிரானி சந்திரசிறி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், பீ.சீ.ஆர் பரிசோதனை மூலம் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதினை உறுதி செய்ய முடியும் என்ற போதிலும், புதிய வகை கொவிட் தொற்று குறித்து கண்டறிவதில் சிரமங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.