வடக்கில் 2009 இற்கு முன் போதைப் பொருள் பாவனை இல்லை: ஜெகதீஸ்வரன் எம்.பி
வடக்கு மாகாணத்தில் 2009 இற்கு முன் இவ்வாறான போதைப் பொருள் பாவனையும், திட்டமிட்ட குற்றச் செயல்களும் காணப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தற்போது இலங்கையிலே முக்கிய பேசுபொருளாக உள்ளது.
போதைப்பொருள் விற்பனை
உண்மையிலே இந்த இரண்டும் ஒரு நாட்டுக்கு பெரும் சவாலை விடுகின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது. அதனாலேயே எங்களுடைய அரசாங்கம் இதற்கான தீர்க்கமான முடிவினை மேற்கொண்டிருக்கின்றது.
இதனை கருத்தில் கொண்டு கடந்த 30ம் திகதி ஜனாதிபதி தலைமையிலே சுகததாச உள்ளரங்கிலே இதனை தடுப்பதற்கான செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

தற்போது இலங்கையை பொறுத்தவரை போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் பரிமாற்றம் போன்ற விடயங்கள் மிகவும் முக்கியத்துவமாக காணப்படுகின்றன.
ஆரம்பத்திலே இலங்கையிலே கனிசமான அளவிலே போதைப்பொருள் பாவிக்கக்கூடிய நபர்கள் இருக்கின்ற ஒரு தேசமாக இருந்தது.
அதன் பிற்பாடு இலங்கையை போதைப்பொருள் பரிமாற்ற நிலையமாகவும் போதைப்பொருள் மாபியாக்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
பொறுப்புள்ள அரசாங்கம்
தற்பொழுது அதுக்கு மேலாக சென்று போதைப்பொருளை உற்பத்தி செய்கின்ற அளவுக்கு மிக மோசமான நிலையிலே எங்களுடைய நாடு தள்ளப்பட்டுள்ளது.
உண்மையிலே இந்த போதைப்பொருள் மாபியாக்கள் கடந்த கால அரசாங்கங்களினாலும், அரசியல்வாதிகளினாலும் அரவணைக்கப்பட்டு அவர்களுடைய வழிநடத்தலில், அவர்களுடைய ஒத்துழைப்பின் பலனாகவே எமது நாடு பாரதூரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியிலே நாங்கள் இந்த போதைப்பொருளை ஒழிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்திருக்கின்றோம்.
நிச்சயமாக எங்களுடைய காலப்பகுதியிலே விரைவாக நாட்டிலிருந்து போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்கான திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri