12 வயதுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது குறித்து தீர்மானிக்கவில்லை - சுதர்சனி பொனாண்டோபிள்ளே
12 வயதுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றுவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பொனாண்டோபிள்ளே(Sutharsini fernandopulle) தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு, கோவிட் தொற்றைத் தாக்கத்தை விடவும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் அதிகம் என சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
13 வயதுக்கும் மேற்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவது குறித்து உலக நாடுகளும் இலங்கையும் இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தொழில்நுட்ப குழு தீர்மானிக்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவது குறித்து விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் நடாத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
கோவிட் நோய் ஆபத்தை விடவும் தடுப்பூசி ஏற்றுவதனால் சிறார்களுக்கு இதயம் சார் நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்பட்ட நோய்களை உடைய 12 முதல் 19 வயது வரையிலானவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan