மைத்திரி பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட வைபவத்தில் கூட்டமில்லை
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்ட வைபவம் ஒன்றில் மக்கள் எவரும் வருகை தரவில்லை என தெரியவருகிறது.
மைத்திரி உட்பட 10 மட்டுமே நிகழ்வில் பங்கேற்பு

புத்திசாலித்தனமான போராட்டம் அமைப்பு ஒழுங்கு செய்த நாட்டை கட்டியெழுப்பும், நெருக்கடியை தீர்க்கும் தேசிய அபிவிருத்தி திட்டம் தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று நடைபெற்றது.
இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டார். நூலில் முதல் பிரதி முன்னாள் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது.
இந்த வைபவத்தில் பலர் அமர்வதற்கான நாற்காலிகள் போட்டப்பட்டிருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட 10 பேர் மாத்திரமே வைபவத்தில் கலந்துக்கொண்டதாக தெரியவருகிறது.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri