நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெறவில்லை! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
நிலக்கரி இறக்குமதியின் போது எவ்வித ஊழலும் நடைபெறவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனினும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்த மட்டத்தில் இருந்ததை ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியிலிருந்து விலகியது தொடர்பில், அமைச்சர்கள் பலரின் பங்கேற்புடன் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (17.4.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
விசாரணை
நிலக்கரி கொள்வனவு குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், நிலக்கரி தொடர்பான ஊழல்கள் குறித்து எவரேனும் தகவல் அறிந்திருந்தால் அதனை வழங்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

நிலக்கரி இறக்குமதி தொடர்பான சர்ச்சைகளை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக தெரியவருகின்றது.
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan