இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு எதிராக சபையில் நம்பிக்கையில்லா தீர்மானம்
பொது மக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பொது மக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் தலையீடு பாதிக்கலாம் என்பதற்காகவே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த நேரத்தில் அருண ஜயசேகர கிழக்கு மாகாணத்தின் இராணுவக் கட்டளைத் தளபதியாக செயற்பட்டதால் அவரின் தலையீடு விசாரணைகளை பாதிக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
அத்துடன், வேறு பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வரைவு குறித்து நாளையதினம் கட்சி உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் விவாதிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
