பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று கையளிப்பு
பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று(12) கையளிக்கப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அதனை இன்று சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளது.
பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றைய தினம் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
எனினும் நேற்றைய தினம் சபாநாயகர் பொலன்னறுவைப் பிரதேசத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்ததன் காரணமாக அதனைக் கையளிக்க முடியாமல்போனதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகர் அலுவலத்தில் வைத்து குறித்த பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என்றும் அஜித் பெரேரா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்





முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam
