சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தயார்! அஜித் பெரேரா அறிவிப்பு
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரைபு மசோதா தயார் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா இது குறித்து தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு நம்பிக்கையில்லாப்பிரேரணையை எதுவித நியாயமான காரணங்களும் இன்றி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிராகரித்திருந்தார். அதன் மூலம் நாடாளுமன்றத்தை அவர் பிழையாக வழிநடத்தியிருந்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு
சபாநாயகரது செயற்பாட்டின் காரணமாக அவர் மீதான நம்பிக்கை இல்லாமற்போயுள்ளது. அதன் காரணமாகவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்க தீர்மானித்தோம்.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வரைபு தற்போது தயாரிக்கப்பட்டு விட்டது. எதிர்வரும் 21ம் திகதி நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியிலுள்ள கட்சித் தலைவர்களுக்கு குறித்த வரைபு முன்வைக்கப்படும்.
எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் சபாநாயகர் மீது நம்பிக்கையற்று இருப்பதன் காரணமாக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





கடந்த வாரம் பிரவீன் காந்தி, இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து எலிமினேட் ஆனது இவர்தான்... யார் பாருங்க Cineulagam
