பசில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்: திஸ்ஸ அத்தநாயக்க
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
"நாட்டின் நிதி நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறாமை, நிதி நெருக்கடியை ஏற்படுத்தியமை, மக்கள் மீது விலையேற்றம் என்ற சுமையைத் திணித்தமை உட்பட மேலும் சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டே பிரேரணை முன்வைக்கப்படும்" என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அரச கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆளுந்தரப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது. சாதாரண பெரும்பான்மைகூட ஊசலாடும் மட்டத்திலேயே உள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதான எதிரணி இப்படியொரு வியூகத்தைக் கையாள
எதிர்பார்த்துள்ளது.
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri