கைவிடப்படும் நிலையில் பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியின் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின்போது தனது கடமையை சரிவரச் செய்யத் தவறியதற்காக எதிர்க்கட்சி அவர் மீது குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
ஆயினும், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சட்டச் சிக்கல் ஒன்றின் காரணமாக விவாதத்துக்கு எடுக்கப்படாமலே கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
எனினும், பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் எந்தவொரு விடயப் பரப்பும் கையளிக்கப்படாத நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்க முடியாது என்று ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவ்வாறான சூழலில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க முடியாது என்றும் குற்றப் பிரேரணையொன்றை மாத்திரமே முன்வைக்க முடியும் என்றும் அவர்கள் சுடடிக்காட்டியுள்ளனர்.
அதன் காரணமாக பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டச் சிக்கல்
இந்நிலையில், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான சட்டச் சிக்கலை தெளிவு படுத்தியதற்காக சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தற்போதைக்கு தெரிய வந்துள்ளது.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நேற்றைய தினம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், சட்டச் சிக்கல் தொடர்பான தெளிவு கிடைக்கும் வரை பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க வேண்டாம் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதற்கிடையே இலங்கை வரலாற்றில் பிரதியமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கதவடைப்பு நடவடிக்கையை கண்டு அஞ்சும் அநுர அரசு: தமிழரசுக்கட்சிக்கு எதிராக சதித்திட்டம் - சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
