இலங்கையின் தேசியக் கொடியில் மாற்றங்கள் செய்யப்படவில்லை! - பாதுகாப்புச் செயலாளர்
நாட்டின் தேசியக் கொடியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியில் மாற்றங்கள் செய்யப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மரபு ரீதியாக பயன்படுத்தப்பட்டு வரும் தேசிய கொடியே இந்த ஆண்டு தேசிய சுதந்திர தின நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கொடியில் காணப்படும் வாள் ஏந்திய சிங்கம் தொடர்பில் சில திருத்தங்களை மேற்கொள்கொள்ளுமாறு சிலர் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், அவ்வாறு மாற்றங்கள் தற்போதைக்கு செய்யப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் திருத்தங்கள் செய்வதன் மூலமே இவ்வாறு கொடியில் மாற்றங்கள் செய்யப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
