எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்!
கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் எண்ணெய் இருக்க வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர கருத்து வெளியிட்டுள்ளார்.
எண்ணெய் எரியுண்டிருக்கலாம் அல்லது ஆவியாகி இருக்கலாம் என்ற நிபுணர்களின் கருத்து தங்களுக்கு கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் மற்றும் தீயின் அளவு, தீ நீடித்த நாட்கள் மற்றும் எண்ணெய் தொட்டி அமைந்துள்ள இடம் ஆகியவற்றின் அடிப்படையில், உரிமையாளர்கள் மற்றும் மீட்பவர்கள் கப்பலில் எண்ணெய் இல்லை என்று நம்புகிறார்கள் என்று அவர் கூறினார்.
இந்த கப்பலில் 300 மெட்ரிக் தொன் எரிபொருள் வைப்பிடம் இருந்தது என்று லஹந்தபுர கூறினார்.
கப்பல் அருகே கடலில் இருந்து தினமும் மாதிரிகளில் கசிவு எண்ணெய் இருக்கிறதா என்று பார்க்கப்படுவதாகவும் இதுவரை அத்தகைய எண்ணெய் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam