யானைகளை மீண்டும் கொண்டு செல்வது குறித்து ஏற்பாடுகள் இல்லை - தாய்லாந்து தூதுவர்
தாய்லாந்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட "தாய் ராஜா" மற்றும் "கண்டுல" ஆகிய யானைகளை மீண்டும் நாட்டிற்குக் கொண்டு செல்வது குறித்து அரசாங்க மட்டத்தில் இதுவரை எந்த கவனமும் செலுத்தப்படவில்லை என்று தாய்லாந்து தூதுவர், மல்வத்து மகா நாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பரவும் செய்திக்கான பதில்
மல்வத்து மகா விகாரையின் பூஜைக்காக சென்றபோது, "தாய் ராஜா" மற்றும் "கண்டுல" யானைகள் குறித்து பரவும் செய்தி தொடர்பில் மல்வத்து மகா நாயக்க தேரர் வினவியபோது, அதற்குப் பதிலளிக்கும் போதே தாய்லாந்து தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீ தலதா மாளிகையின் யானைப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் "தாய் ராஜா" யானை தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று பதில் நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
முத்துராஜா யானை கொண்டு செல்லப்பட்ட பின்னர் தற்போது நாட்டில் உள்ள தாய்லாந்து யானைகள் இரண்டில் ஒன்றான "தாய் ராஜா"வின் உடல்நிலை தனது மேற்பார்வையின் கீழ் இருப்பதாகவும், அந்த யானை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் பேராசிரியர் அசோக தங்கொல்ல கூறியுள்ளார்.
ஆரோக்கியமாக உள்ள தாய் ராஜா
தாய்லாந்து மருத்துவர்கள் கூட இலங்கைக்கு வந்தபோது "தாய் ராஜா" யானையைப் பார்க்க வந்ததாகவும், யானை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவர்கள் கூட உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த இரண்டு யானைகள் தொடர்பாகவும் இந்த நேரத்தில் ஏன் பேச்சு வந்தது என்று தனக்குத் தெரியாது, ஆனால் இந்த உரையாடல் அவ்வப்போது நாட்டில் எழுவதைப் பார்க்க முடிவதாகவும் அவர் கூறினார்.
தற்போது நாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக இருப்பதாகவும், அவைகளில் 15 யானைகள் மட்டுமே ஆண் யானைகள் என்றும் கூறிய அவர், கலாசார விழாக்களுக்கு போதுமான யானைகள் இல்லாமை ஒரு தீவிரமான பிரச்சினை என்றும் வலியுறுத்தினார்.
வன யானைகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், தேவைப்பட்டால் கலாசார விழாக்களுக்குத் தேவையான யானைகளை நாட்டின் வன யானைகளின் தொகையிலிருந்தே பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam