சிரான் பாஷிக்குடன் பணப் பரிமாற்றம் செய்தாரா ! – பிரபல மாடல் அழகி விளக்கம்
பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினுர் சிரான் பாஷிக்குடனான தொடர்புகள் குறித்து பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி விளக்கமளித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் சிரான் பாஷிக் என்பவருடன் தான் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தொடர்பில் அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், சிரான் பாஷிக் என்ற நபரை தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தன்னிடம் இருப்பது தான் சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமே எனவும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கோ அல்லது வேறு நபர்களுக்கோ சொந்தமான பணம் எதுவும் தன்னிடம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பியுமி ஹன்சமாலி தொடர்பில் காலத்திற்கு காலம் இவ்வாறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், தன்னை தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பல்வேறு பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ள பியூமி ஹன்சமாலி, தான் ஒருபோதும் பொய்யான தகவல்களை வெளியிடுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பெருமளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் சிரான் பாஷிக், அண்மையில் டுபாயில் கைது செய்யப்பட்ட பின்னர் கடந்த 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிரான் பாஷிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பியூமி ஹன்சமாலி தனது சமூக ஊடகப் பதிவில், சிரான் பாஷிக்குடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், அவருடன் பணப் பரிமாற்றம் மேற்கொண்டதாக வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan