நடிகைகளை அவுஸ்திரேலியா அழைத்துச்சென்ற இலங்கை கிரிக்கெட் சபை! கொதித்தெழுந்த மக்கள்!
புதிய மக்கள் முன்னணி (NJP) தலைமையில் ''பணம் பறிக்கும் கொள்ளையர்களிடம் இருந்து இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்றுவோம்'' என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக இன்று(27.07.2023) குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதிமோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்
இதன்காரணமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய நடிகர்கள் மற்றும் நண்பர்களுக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவன பணத்தின் மூலம் செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கள் எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
