முடிவை எடுக்க ஞாயிற்றுக் கிழமை வரை காத்திருக்கும் அமைச்சர்
தனது அமைச்சின் செயலாளருடன் மோதலை ஏற்படுத்திக்கொண்டுள்ள ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சாவுக்கும் (Nimal Lanza) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை நின்று போயுள்ளது.
இதனையடுத்து தான் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை வரை அமைதியாக காத்திருப்பதாக லங்சா தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.
நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில்லை என்ற பிரச்சினை சம்பந்தமாக ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா, ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகி முடிவு செய்திருந்ததுடன் அமைச்சில் உள்ள தனது பொருட்களை அங்கிருந்து எடுத்துச் செல்லுமாறு தனது பணியாளர்களுக்கு அறிவித்திருந்தார்.
இந்த நிலைமையில், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் தலையிட்டு ஜனாதிபதியுடன் நேற்றைய தினம் சந்திப்பை ஏற்பாடு செய்வதாக ராஜாங்க அமைச்சருக்கு அறிவித்திருந்தார். எனினும் நேற்றைய தினம் அந்த சந்திப்பு நடைபெறவில்லை.
ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் மந்தகதி, தனது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு உட்பட சில பிரச்சினைகள் காரணமாக அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri