சிகிரியாவில் இரவு நேர சுற்றுலா : அரசாங்கத்தின் புதிய திட்டம்
பௌர்ணமி நாட்களை அண்டிய நிலவொளி நாட்களில் சிகிரியா (Sigiriya) மலைக்குன்றில் பொழுதைக் கழிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
அதன்பிரகாரம் பௌர்ணமி நாளுக்கு முந்திய இரண்டு நாட்கள், பௌர்ணமி நாள், பௌர்ணமி நாளுக்குப் பிந்திய இரண்டு நாட்கள் என்று மாதம் தோறும் ஐந்து நாட்கள் மட்டும் இரவு நேரங்களில் சிகிரியா மலைக்குன்றில் ஏற சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

அதற்கான தனியான கட்டணம் ஒன்றும் நிர்ணயிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிகிரியாவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி, அப்பிரதேசத்தின் குடிநீர் வசதிகளை அதிகரித்தல், முதலுதவி நிலையங்கள் அமைத்தல் குறித்தும் சுற்றுலாத் துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam