பயனர்களுக்கு வட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சம்
மெட்டாவுக்கு சொந்தமான மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் முன்னணி செயலியான வட்ஸ்அப், கூகுள் மூலம் வட்ஸ்அப் இணையப் பயனர்களுக்காக Reverse Image Search எனும் அம்சத்தை வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Reverse Image Search எனும் அம்சம், வட்ஸ்அப் பயனர்கள் சந்தேகத்திற்குரிய புகைப்படத்தைச் சரிபார்ப்பதற்காக நேரடியாகக் கூகுளில் பதிவேற்றி சோதனை செய்ய அனுமதிக்கும் ஒரு முக்கிய அம்சமாகும்.
அனைத்து வட்ஸ்அப் பயனர்கள்
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த அம்சமானது, பயனர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்குரிய புகைப்படங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும் உதவும்.

மேலும், வட்ஸ்அப் பயனர்களை டிஜிட்டல் உலகத்தை மிகவும் திறம்பட வழிநடத்த இது உதவுகிறது.
WABetaInfoவின் தகவல்படி குறித்த அம்சம் விரைவில் அனைத்து வட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு