ஈ-ட்ராபிக் மொபைல் செயலி ஆபத்தானது! இணையத்தள நிபுணர்கள் எச்சரிக்கை
பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள ஈ-ட்ராபிக் மொபைல் செயலியானது தனிமனித சுதந்திரம், இணையத்தள பயன்பாடு என்பவற்றுக்கு ஆபத்தானது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய இணையத்தள பாதுகாப்பு நிபுணரான சஞ்சன ஹத்தொடுவ இது குறித்து பி.பி.சி. நிறுவனத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.
பொலிஸ் திணைக்கள தரவுகள்
குறித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கைப் பொலிஸ் திணைக்கள தரவுகள் அண்மைக்காலமாக திருடுபோகும் சந்தர்ப்பங்களை அடிக்கடி கேட்க முடிகின்றது.
அவ்வாறான நிலையில் அவர்கள் உருவாக்கியுள்ள செயலி பாதுகாப்பானது என்று எந்த வகையிலும் உறுதிப்படுத்த முடியாது மறுபக்கத்தில் அவர்களின் செயலியை தரவிறக்கம் செய்யும் தொலைபேசிகளின் இருப்பிடத்தை (லொகேஷன்) கண்டறிவதற்கும் இந்த செயலி பயன்படுத்தலாம்.
அது தனிமனித சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடாகும்.
ஈ-ட்ராபிக் மொபைல் செயலி
இவற்றுக்கு அப்பால் எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ள தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கும் இந்த மொபைல் செயலி எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் எனினும் பொலிஸார் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
குறித்த மொபைல் செயலியை தரவிறக்கம் செய்யுமாறு யாரையும் பலவந்தப்படுத்தவில்லை என்றும் விரும்பியவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் தற்போதைக்கு ஈ-ட்ராபிக் மொபைல் செயலி மூலம் இதுவரைக்கும் 117 பேர் , போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான தகவல்களை பொலிஸ் திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
