கணனி சம்பந்தமான குற்றங்களில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் கைது
இலங்கையில் தங்கியிருந்து கணனி சம்பந்தமாக அதிகளவிலான குற்றங்களில் ஈடுபட்ட இரண்டு நைஜீரிய பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள், சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல், குறுஞ் செய்திகள் மூலம் இந்த குற்றங்களை செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயண விசாவில் இலங்கை வந்துள்ள இந்த நைஜீரிய பிரஜைகள் விசா அனுமதி காலம் முடிந்தும் நாட்டில் தங்கியிருந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த சந்தேகநபர்கள் சட்டவிரோதமாக கல்கிஸ்சை பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணையத்தளம் வழியாக பண பரிமாற்றங்களை செய்வதாக இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அஜித் ரோஹன பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam