நைஜீரியாவில் பேருந்து விபத்து: 22 விளையாட்டு வீரர்கள் பலி
நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவின் பாலம் ஒன்றில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் பலியாகினர்.
விளையாட்டு விழாவிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 22 விளையாட்டு வீரர்களே இவ்வாறு உயிரிழந்ததோடு பல பயணிகள் காயமடைந்துள்ளனர்.
பேருந்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், 30இற்கும் மேற்பட்ட பயணிகளுடன், இந்த வாகனம், பாலத்தில் இருந்து கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்களுக்கான காரணம்
விபத்தில் இருந்து தப்பியவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆபிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவில், வீதி விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. மோசமான வீதி நிலைமைகள் மற்றும் போக்குவரத்துச் சட்டங்களை முறையாக நடைமுறைபடுத்தாமையே இதற்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri