நட்சத்திர வீரர் நெய்மர் இல்லாமல் உலகக்கோப்பையை தொடங்கும் பிரேசில்
2026 பிபா உலகக்கோப்பை தொடரில் மொரோக்கோ அணிக்கு எதிராக நடைபெறவுள்ள பிரேசிலின் முதல் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் நெய்மர் களமிறங்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்சலோட்டி இதனை தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த கேன் வில்லியம்சன்! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்..
நட்சத்திர வீரர் நெய்மர்
'செலெசாவ்' என அழைக்கப்படும் பிரேசில் அணி, இந்திய நேரப்படி ஜூன் 14ஆம் திகதி மொரோக்கோவை எதிர்கொண்டு தனது உலகக்கோப்பைப் பயணத்தை ஆரம்பிக்கிறது.

இந்தநிலையில், இந்தப் போட்டி மெட்லைஃப் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. நெய்மரின் உடல்நிலை குறித்து கருத்து வெளியிட்ட அன்சலோட்டி, "அவர் விரைவாக முழுமையான உடற்தகுதியை பெறுவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.
அடுத்த வாரம் முழுமையான பயிற்சியில் இணைவார் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை
உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஏற்பட்ட கால் தசை காயம் காரணமாக நெய்மர் முதல் ஆட்டத்தில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவிய நிலையில், தற்போது அவர் மொரோக்கோவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

பிரேசில் அணி தனது அடுத்த போட்டியில் ஜூன் 19ஆம் திகதி ஹெய்டி அணியையும், ஜூன் 24ஆம் திகதி ஸ்கொட்லாந்து அணியையும் எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் நெய்மர் அணிக்குத் திரும்புவார் என்ற நம்பிக்கையை அன்சலோட்டி வெளியிட்டுள்ளார்.
உலகக்கோப்பை வரலாற்றில் பிரேசிலும் மொரோக்கோவும் இரண்டாவது முறையாக மட்டுமே மோதவுள்ளன.
இதற்கு முன் 1998 உலகக்கோப்பையின் குழுநிலைப் போட்டியில் சந்தித்த இரு அணிகளில், பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பிபா உலக தரவரிசை
அந்த ஆட்டத்தில் ரொனால்டோ நசாரியோ மற்றும் ரிவால்டோ ஆகியோர் தங்களது முதல் உலகக்கோப்பை கோல்களைப் பதிவு செய்திருந்தனர்.
உலகக்கோப்பை போட்டிகளில் ஆபிரிக்க அணிகளுக்கு எதிராக பிரேசில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.

இதுவரை நடைபெற்ற எட்டு போட்டிகளில் ஏழில் வெற்றி பெற்றுள்ள பிரேசில், 2022ஆம் ஆண்டு கமரூன் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததே அதன் ஒரே தோல்வியாகும்.
மேலும், தற்போதைய பிபா உலக தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ள இரண்டு அணிகள் மோதும் ஒரே குழுநிலை ஆட்டமாக இந்தப் போட்டி அமைகிறது.
தரவரிசையில் பிரேசில் ஆறாவது இடத்திலும், மொரோக்கோ எட்டாவது இடத்திலும் உள்ளன.
you may like this..