பிரபல கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மருக்கு(Neymar) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை சாண்டோஸ் கிளப் உறுதி செய்துள்ளது.
கோவிட் தொற்று உறுதி
33 வயதான நெய்மருக்கு கடந்த வியாழக்கிழமை(5ஆம் திகதி) முதல் அறிகுறிகள் தோன்றியதையடுத்து, உடனடியாக அணியின் செயல்பாடுகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்துவிட்டதாக பிரேசில் அணியான சாண்டோஸ் தெரிவித்துள்ளது.
அவர் மீண்டும் எப்போது களத்துக்குத் திரும்புவார் என்பதை கிளப் குறிப்பிடவில்லை.
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
இதனையடுத்து உடனடியாக சக வீரர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இவருக்கு கோவிட் தொற்று ஏற்படுவது இது 2ஆவது முறையாகும். அவருக்கு இதற்கு முன்பு கடந்த 2021ஆம் ஆண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri