ஐ.மக்கள் சக்தியில் இருந்து விலகியதாக வெளியான செய்தி பொய்யானது - ஹேஷா விதானகே
அரசாங்கத்தில் தாம் இணைய போவதாக இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Withanage) தெரிவித்துள்ளார்.
இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் அதிகார பலம் வேகமாக குறைந்து வருகிறது. நாங்கள் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக போராடி வருகிறோம். கட்சிக்குள் மாத்திரம் அந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
ஐக்கிய மக்கள் சக்தி தற்போது சிறந்த இடத்தில் இருக்கின்றது. மக்களை காப்பாற்றுவதற்காக இருக்கும் ஒரே தலைவர் சஜித் பிரேமதாச எனவும் ஹேஷா விதானகே குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்............
சஜித் அணி எம்.பிக்கள் இருவர் விரைவில் 'பல்டி' - தொகுதி அமைப்பாளர் பதவி இராஜினாமா
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam