முல்லைத்தீவில் பெறுமதிமிக்க அரியவகை பொருளுடன் சிக்கிய நால்வர் - செய்திகளின் தொகுப்பு
முல்லைத்தீவில் அரியவகை பொருளுடன் தென்பகுதியினை சேர்ந்த நால்வர் இரண்டு வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு - வட்டுவாகல் பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திமிங்கலத்தின் ஆம்பல் என்ற பொருளுடன் அனுராதபுரம் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்டதுடன் வாகனங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
2 கிலோ 500 கிராம் நிறைகொண்ட பெறுமதிமிக்க ஆம்பல் எனப்படும் அரியவகையான பொருளினை முல்லைத்தீவில் விற்பனைக்காக சந்தேகநபர்கள் கொண்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri