கர்தினாலின் ஓய்வு குறித்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை! கொழும்பு மறைமாவட்டம் தெளிவுபடுத்தல்
கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இவ்வருட இறுதியில் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறப் போகின்றார் என சமூக வலைத்தளங்களிலும் சில ஊடகங்களிலும் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று கொழும்பு மறைமாவட்ட வெகுஜனத் தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், ஆயர் ஒருவரின் பதவி அல்லது ஓய்வு குறித்த இறுதித் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் வத்திக்கானுக்கே உள்ளது.
கர்தினாலின் பதவி நிலுவை குறித்து வத்திக்கானிடமிருந்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் கிடைக்கப் பெறவில்லை.
இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம்
கத்தோலிக்கத் திருச்சபையின் சட்டக்கோவையின்படி, ஓர் ஆயர் தனது 80ஆவது வயதை எட்டும் போது ஓய்வு பெறுவது குறித்துப் பரிசீலிக்கப்படும். இருப்பினும், அந்தப் பதவியில் நீடிப்பதா அல்லது ஓய்வு பெறுவதா என்பது குறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் பரிசுத்த பாப்பரசரிடமே உள்ளது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அடுத்த ஆண்டு 80 வயது பூர்த்தியாகவுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் கொழும்பு மறைமாவட்டத் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படும் எனச் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இவ்வாறான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று அருட்தந்தை ஜூட் கிரிசாந்த திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஜனனியை முடித்துவிட பிளான் போட்ட குணசேகரன், ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam